தந்தானைத் துதிப்போமே

தந்தானைத் துதிப்போமே

தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையாரே, கவி - பாடிப்பாடி.

விந்தையாய் நமக்கனந்தனந்தமான,
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் --- தந்தானைத்

1. ஒய்யாரத்துச் சீயோனே - நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் --- தந்தானைத்

2. கண்ணாரக் களித்தாயே - நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே --- தந்தானைத்

3. சுத்தாங்கத்து நற்சபையே - உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் --- தந்தானைத்

4. தூரம் திரிந்த சீயோனே - உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! --- தந்தானைத்

5. சிங்காரக் கன்னிமாரே, - உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து,
மங்காத உம் மணவாளன் யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் --- தந்தானைத்



dhanththanaith thuthibbome - thirus
chabaiyare, kavi - badibbadi.

vinththaiyay namakkananthdhananthdhamana,
villarkariyathor nanmai mika mikath --- dhanththanaith

1. oyyaraththus siyone - niyum
meyyakak kalikurnththu nernththu,
aiyanesukkunin kaiyaik kubbith thuthi
seykuvaiye, makiz kolluvaiye, namum --- dhanththanaith

2. kannarak kaliththaye - nanmaik
kadsiyaik kandu rusiththub busiththu
ennukkatangkadha ethdhanaiyo nanmai
innumunmer sona maribor beythume --- dhanththanaith

3. suththangkaththu narchabaiye - unai
murrayk kollave alainththu thirinththu
chaththuk kulainththunais chaththiyakkath dhammin
rathdhaththais sinththi eduththe uyir varam --- dhanththanaith

4. thuram thirinthdha siyone - unaith
thukkiyeduththuk karaththinilenththi,
aarangkal buddi alangkariththu ninai
athdhan manavaddi yakkinathu ennai! --- dhanththanaith

5. singkarak kannimare, - um
alangkarak kummi adiththub padiththu,
mangkadha um manavalan yesudhanai
vazththi vazththi eeththib paninththidum --- dhanththanaith